Home > செய்திகள் > 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி

18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி

சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்சும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சும் களமிறங்கின.

இந்த போட்டி நடைபெறும் மைதானம் மிகவும் சிறிதாக இருப்பதால் வீரர்கள் சிக்சர்களை அடித்து நொறுக்கினர். டாஸ்- ஐ வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்திலிருந்து நன்கு விளையாடி20 ஓவர் முடிவில் 228 ரன்களை பெற்று 4 விக்கெட்களை இழந்தது.

அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 88 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

அதிகபட்சமாக நிதிஷ் ராணா 58 ரன்களும், இயான் மோர்கன் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக 20 ஓவர் முடிவுகள் 210 ரன்கள் எடுத்து 8 விக்கெட்களை இழந்தது.

இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றிப்பெற்றது. இந்த வெற்றியை ருசித்ததன் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது.

You may also like
ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்
ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்
வணக்கம் நன்றி என்றால் என்ன அர்த்தம் விஜய் சேதுபதி?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்
கொல்கத்தாவை தோற்கடித்த மும்பை
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
பெங்களூரு அணியை தோற்கடித்த பஞ்சாப் – ஐபிஎல்

Leave a Reply