Home > செய்திகள் > 59 ரன்கள் வித்தியாசத்தால் டெல்லி அணி வெற்றி

59 ரன்கள் வித்தியாசத்தால் டெல்லி அணி வெற்றி

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் வீரர்களில் பெரிய மாற்றம் இல்லாமலேயே களத்தில் இறங்கினர்.

டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ப்ரித்வி ஷாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 42 ரன்கள் எடுத்தார்.

ஒட்டுமொத்த டெல்லி அணியில் ஸ்டாய்ன்ஸ் அதிரடியாக விளையாடி 53 ரன்களை குவித்தார். இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக படிக்கல், ஃபென்ஞ் ஆகியோர் களமிறங்கி பயங்கரமாக சொதப்பினர்.

படிக்கல் 4 ரன்களிலும், ஃபென்ஞ் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அதிகபட்சமாக விராட் கோலி 43 ரன்கள் எடுத்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்தார்.

இப்படியே படிப்படியாக விளையாடினாலும் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்த பெங்களூரு அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

டெல்லி அணி வீரர் ரபாடா அதிரடியாக விளையாடி 4 விக்கெட்களை கைப்பற்றினார் இதுவே பெங்களூரு அணியின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

You may also like
பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?
ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்
ஐபிஎல் போட்டியில் சாதனை செய்த வீரர்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும்
கொல்கத்தாவை தோற்கடித்த மும்பை
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
பெங்களூரு அணியை தோற்கடித்த பஞ்சாப் – ஐபிஎல்

0 Response

  1. Pingback : டாஸ் வென்ற கோலி முதலில் பேட்டிங் - Puthiyamugam

Leave a Reply