Home > செய்திகள் > வெற்றி சதமடித்த முதல் கேப்டனாக தோனி

வெற்றி சதமடித்த முதல் கேப்டனாக தோனி

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து அண்மையில் ஓய்வுபெற்ற மகேந்திர சிங் தோனி ஐபிஎல் விளையாட்டுகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.இந்த வகையில் துபாயில்  செப்டம்பர் 20 அன்றுதொடங்கிய ஐபிஎல் 2020 முதல் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட்டுக்களில் வீழ்த்தியது.

2019 உலக கோப்பை போட்டிகளின் போது விளையாடிய தோனி 437 நாட்களுக்கு பிறகு நேற்று தான் கிரிக்கெட் மைதானத்தில் இறங்கியிருக்கிறார். கடைசியாக உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தோனி விளையாடினார். அதன் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடாத தோனி கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது ஓய்வை அறிவித்தார்.
ஆனாலும் ஐபிஎல் போட்டிகளில் தோனி தொடர்ந்து விளையாடுவேன் என்று அறிவித்தது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.இந்நிலையில் நேற்றைய ஐபிஎல் 2020 முதல் போட்டியில் வெற்றிக்கான இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அடையும்போது தோனி இரண்டுபந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் மைதானத்தில் இருந்தார்.

இந்த போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் தோனி  ஐபிஎல் போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை செய்திருக்கிறார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணித் தலைவராக இருந்து 100 வெற்றிகளை பெற்ற முதல் கேப்டனாக தோனி சாதனையை பதிவு செய்திருக்கிறார். 

You may also like
home of dhoni fan
தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்
கேப்டன் தோனி, மகள் ஷிவா
தோனிக்கு ஆதரவாக வைரல் ஹேஷ்டேக்
ஐ.பி.எல் போட்டிகளில் 100 கேட்ச்களை பிடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றார் எம்.எஸ்.தோனி!
சாம் கர்ரன் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்

Leave a Reply