Home > செய்திகள் > தமிழகத்தில் இ -பாஸ் ரத்து ஆகிறது – முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

தமிழகத்தில் இ -பாஸ் ரத்து ஆகிறது – முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

தமிழகத்தில் இ -பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 7வது கட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது.ஊரடங்கு விதிகளின்படி, தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை மாவட்டங்களுக்கு இடையே பயணிப்பதற்கு தனியார் வாகனங்கள்

இ- பாஸ் பெறுவது கட்டாயம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அண்மையில் முதல்வர் பழனிசாமி இ – பாஸ் பெறுவதில் சில தளர்வுகளையும் அறிவித்து இருந்தார்.

இருப்பினும் இ – பாஸ் நடைமுறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள்,பொதுமக்கள் தொடர்ந்து வலியறுத்தி வருகின்றனர்.

இ -பாஸ் கட்டுப்பாடுகளை கைவிடுமாறு மத்திய உள்துறை செயலர் அஜய் வாலா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அண்மையில் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில் இ -பாஸ் நடைமுறையை ரத்து செய்வதா ? வேண்டாமா ? என்று குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தலைமை செயலாளர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர். இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது சவாலானது என்று சுகாதாரத் துறை அமைச்சர் ஏற்கனவே கூறியிருக்கிறார்.

ஆகவே முதலமைச்சர் என்ன முடிவினை எடுக்க போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து புதுச்சேரியில் இ – பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

You may also like
முதல்வர் வேட்பாளர் பாஜக தலைவர் கருத்துக்கு அதிமுக பதில்
வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
“எது ஊழல் கட்சி? நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா?” – எடப்பாடி பழனிசாமிக்கு ஆ.ராசா MP சவால்
புரெவி புயல்- மக்களுக்கு முதலமைச்சரின் வேண்டுகோள்

Leave a Reply