Home > செய்திகள் > சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது: திமுக எம்.பி. கனிமொழி டுவிட்.!!!

சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது: திமுக எம்.பி. கனிமொழி டுவிட்.!!!

சிறப்பு ரயில்களில் முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கான கட்டணச்சலுகை ரத்துக்கு திமுக எம்.பி.கனிமொழி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்து சேவையை தொடங்க கடந்த 7-ம் தேதி முதல் மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று, சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. அதன்படி சென்னையில் இருந்து செங்கோட்டை, கன்னியாகுமரி, கோவை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கும், திருச்சியில் இருந்து நாகர்கோவிலுக்கும் என 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும், சென்னையில் இருந்து டெல்லிக்கும், பீகார் மாநிலம் சாப்ராவிற்கும், திருச்சியில் இருந்து மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிற்கு 3 சிறப்பு ரயில்கள் வரும் 12-ம் தேதி முதல் இயக்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள பதிவில், தமிழகத்தில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டணச் சலுகையை மத்திய அரசு ரத்து செய்திருப்பது மனிதாபிமானமற்றது. பொதுமுடக்கம் காரணமாக, வருவாய் இன்றி, நாடு முழுக்க பலர் அவதிப்பட்டு வரும் நிலையில், முதியவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுக்கபட்டு வந்த இந்த சிறிய சலுகையைக் கூட மத்திய அரசு ரத்து செய்திருப்பது, நியாயமில்லை என்று பதிவிட்டுள்ளார்.

You may also like
“இதுதான், கோழைகளுக்குத் தெரிந்த ஒரே ஆயுதம்” – கனிமொழி கண்டனம்..
ஆளுனர் மாளிகையை முற்றுகையிட முயற்சி; எம்.பி கனிமொழி மீது வழக்குப்பதிவு
எம்எல்ஏ தங்கம் தென்னரசு மற்றும் தற்போதைய எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் தாயாருமான ராஜாமணி அம்மாள் நேற்று காலமானார்.
ஜிஎஸ்டி இழப்பீடு செய்வது குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் – முக ஸ்டாலின்

Leave a Reply