Home > செய்திகள் > தமிழக அரசு வெளியிட்ட நிவர் புயல் பாதிப்பு முதல் கட்ட அறிக்கை

தமிழக அரசு வெளியிட்ட நிவர் புயல் பாதிப்பு முதல் கட்ட அறிக்கை

நிவர் புயல் காரணமாக 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மொத்தம் 101வீடுகள்சேதமடைந்துள்ளதாகவும் தமிழகஅரசுதரப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று நள்ளிரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.  புயல் கரையைக் கடக்கும்போது 140 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

புயல் சேதம் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள முதற்கட்ட  பட்டியலில், இந்தப் புயலால் மூன்று பேர் உயிர் இழந்திருப்பதாகவும், குடிசை வீடுகள் 89, ஓட்டு வீடுகள் 12 என மொத்தம் 101 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 26 ஆடுமாடுகள்உயிரிழந்திருப்பதாகவும், சாலைகளில் விழுந்து சேதம் அடைந்த மரங்களின் எண்ணிக்கை 380 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புயல் பாதித்த பகுதிகளில் 93,030 ஆண்கள், 94,105 பெண்கள், 40,582 குழந்தைகள் என மொத்தம் 2,27,317 பேர் 3075 மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 19 மின் கம்பங்கள் புயலால் விழுந்தது. 19 மின் கம்பங்களும் சரி செய்யப்பட்டன.

921 நிரந்தர மருத்துவ முகாம்கள் மற்றும் 234 நடமாடும் மருத்துவக் குழுக்கள் உள்ளன. இதன் மூலம் பயன் பெற்றவர்களின் எண்ணிக்கை 73,491 ஆகும்.

பயிர் சேதத்தைப் பொருத்தவரை 14 ஏக்கர் பரப்பளவு வாழை மரங்கள் புயலால் சேதமடைந்துள்ளன என்று தமிழக அரசின் பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதங்கள் குறித்து வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறுகையில், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு நிவாரணங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பார்.

நிவர் புயலால் 36 வருவாய் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்கள் கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

You may also like
வேளாங்கண்ணி தேவாலய பிரார்த்தனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
புரெவி புயல் கரையை கடக்க உள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் நகர்கிறது
டிசம்பர் 4 இல் பாம்பன் இடையே ‘புரெவி’ புயல் கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

Leave a Reply