Home > செய்திகள் > கொரானா பரவல் முதல் இடத்தை நோக்கி முன்னேறும் இந்தியா

கொரானா பரவல் முதல் இடத்தை நோக்கி முன்னேறும் இந்தியா

கொரானா வைரஸ் தொற்று பாதிப்பில் உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்திலிருந்து இரண்டாவது இடத்தை எட்டியுள்ளது இந்திய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த இரு தினங்களாக 90 ஆயிரத்துக்கும் அதிகமாக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

இந்தச் சூழலில் நேற்று 91,723 பேருக்கு நாடு முழுவதும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 42 லட்சத்து 2 ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.

இரண்டாவது இடத்திலிருந்த நாடான பிரேசிலை காட்டிலும் இது அதிகமாகும். தற்போது பிரேசிலில் 41 லட்சத்து 37 ஆயிரத்து 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இதன் மூலம் பிரேசிலை பின்னுக்குத் தள்ளி இந்தியா இரண்டாவது இடத்துக்கு நகர்ந்துள்ளது. பிரேசிலைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரமாகக் குறைந்துள்ளது.

அது போன்று அமெரிக்காவிலும் ஒரு நாள் எண்ணிக்கை தற்போது 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரையில் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 90 ஆயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வருவதால் ஒரு சில வாரங்களில் அமெரிக்காவையும் இந்தியா பின்னுக்குத் தள்ளலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

இது ஒருபுறமிருக்க இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 73 ஆயிரத்து 632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி 31 லட்சத்து 80 ஆயிரத்து 865 பேர் குணமடைந்துள்ளனர்.

8.62 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் குணமடைந்தவர்களின் விகிதம் 77.31ஆக உள்ளது.

இறப்பு விகிதம் 1.71 ஆக உள்ளது. அதுபோன்று நாளொன்றுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு நாடு முழுவதும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

You may also like
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.
15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி

Leave a Reply