Home > செய்திகள் > ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் கிரிக்கெட் வர்ணனையாளர்களாக பணியாற்றி வருகிறார்.

தற்போது ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ள நிலையில் அவர் வர்ணனைப் பணிக்காக இந்தியா வந்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென மாரடைப்பு வந்து இன்று உயிரிழந்துள்ளார்.

52 டெஸ்டுகள், 164 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிப் பிரபலம் அடைந்தவர் டீன் ஜோன்ஸ். டெஸ்டில் 11 சதங்களும் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 சதங்களும் அடித்துள்ளார்.

அவரின் மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You may also like
வணக்கம் நன்றி என்றால் என்ன அர்த்தம் விஜய் சேதுபதி?
18 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வெற்றி
சாம் கர்ரன் தொடர்ந்து அணியில் இடம் பெறுவார்
மீண்டும் கொரோனா சோதனை – சி எஸ் கே அணிக்கு சாதகமான முடிவுகள்

Leave a Reply