Home > அரசியல் > எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மன்மோகன் சிங்

எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் மன்மோகன் சிங்

கடந்த 10ம் தேதி அன்று, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சு வலி காரணமாக அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின.

இதனைத் தொடர்ந்து அவருடைய நலம் விரும்பிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், அவர் விரைவில் உடல் நலம் தேறி வீட்டிற்கு வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு, அவர் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. உடல் நிலை முழுவதுமாக தேறிய நிலையில் இன்று அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார்.

You may also like
ஏழைகளின் வங்கிக்கணக்கில் ரூ.7,500 கோடி செலுத்த வேண்டும் – மத்திய அரசுக்கு மன்மோகன்சிங் குழு சிபாரிசு

Leave a Reply