Home > செய்திகள் > தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு பொதுமுடக்கக் காலத்தில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்தது. தொழில்துறை தேக்கம் அடைந்து முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாக்க தங்கத்தின் மீது முதலீடுகளை அதிகரித்தனர்.

இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து விலை பன்மடங்கு அதிகரித்தது. ஆனால், இந்த ஆண்டு தொழில்துறை தேக்கம் அடையவில்லை. கடந்த 2 மாதங்களாக தேக்கம் குறித்த அச்சம் நிலவியதால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,445க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.35,560க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.40க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.73,400க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply