Home > செய்திகள் > தங்கம் விலையில் ரூ.1,248 வீழ்ச்சி

தங்கம் விலையில் ரூ.1,248 வீழ்ச்சி

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,248 குறைந்துள்ளது.

பொதுமுடக்க காலத்தில் வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்தது ஏழை, எளிய மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த ஆண்டு இறுதியில் ரூ.29 ஆயிரம் வரையிலேயே நீடித்து வந்த தங்கம் விலை, இந்த ஆண்டு ரூ.43 ஆயிரத்துக்கு மேல் எட்டியது.

இந்த நிலையில் இன்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.156 குறைந்து, ரூ.4,766க்கு விற்பனையாகிறது.

அதன் படி, சவரனுக்கு ரூ. 1,248 குறைந்து ரூ.38,128க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.66.90க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.66,900க்கும் விற்பனையாகிறது.

You may also like
ரூ.39 ஆயிரத்தை எட்டியது தங்கம் விலை!
ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்தது
மீண்டும் உயரும் தங்கம் விலை
தங்க நகைகளின் மதிப்பில் இனி 90 சதவிதம் வரை கடன்: ரிசர்வ் வங்கி ஆளுநர்

Leave a Reply