Home > செய்திகள் > சீன செயலிகள் 118 க்கு இந்திய அரசு தடை

சீன செயலிகள் 118 க்கு இந்திய அரசு தடை

இந்தியாவில் 59சீன செயலிகளுக்கு ஏற்கனவேதடைவிதிக்கப்பட்ட நிலையில் நேற்று(செப்டம்பர் 2) மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் நடைபெற்ற இந்தியா – சீனா ராணுவ மோதலைத் தொடர்ந்து சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

இதனால் டிக் டாக் உள்பட 58க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், கடந்த இரு நாட்களாக இந்திய எல்லையில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.இந்த சூழலில் மேலும் 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

மின்னணு மற்றும் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால் பாதுகாப்பு கருதி 118 ஆப்களுக்கு தடை விதிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதில், ஆண்ட்ராய்டு, ஐஃபோன் செல்பேசி தளங்களில் ஏராளமான செயலிகள், பயனர்களின் தரவுகள் திருடப்படுவதாக பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்தன.

இதுபோன்று செயல்களில் ஈடுபடும் விஷமிகள் இந்தியா அல்லாது வெளிநாட்டு சர்வர்கள் மூலம் தரவுகளைத் திருடுவதாகப் புகார்கள் வருகிறது.

எனவே பாதுகாப்பற்ற செயலிகளைத் தடை செய்யுமாறு இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம், மத்திய உள்துறை அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்தது.

இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட கண்காணிப்பில் பயனர்களின் தரவுகளைத் திருடுவது உறுதிப்படுத்தப்பட்டது. எனவே இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதால் 118 செயலிகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி, கட் கட், பைடு, ரைஸ் ஆஃப் கிங்டம், உள்பட 118 ஆப்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி விளையாடுவதால் இளைஞர்கள் மனஅழுத்ததுக்கு ஆளாகி வருவதாகத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பப்ஜி பயனாளர்களிடையே அதிர்ச்சியையும் பெற்றோர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

You may also like
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.
15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி

Leave a Reply