Home > செய்திகள் > ஊரடங்கு நேரத்திலும் உறங்காத குஜராத் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்!

ஊரடங்கு நேரத்திலும் உறங்காத குஜராத் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வெட்டும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்!

மற்ற மாநிலங்களுக்கு ஒரு சட்டம் குஜராத் மாநிலத்துக்கென்று தனிச் சட்டம் இருக்கிறதோ என்று நினைக்கும் வகையில் அந்த மாநிலத்தில் மூன்றுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள சர்க்கரை ஆலைகள் தொடர்ச்சியாக இயங்குகின்றன. கரும்பு வயல்களில் தொடர்ந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை செய்யும்படி நிர்பந்திக்கப்படுகிறார்கள். குஜராத்தில் உள்ள கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக குறிப்பிட்ட சீசனில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் வருவார்கள். கொரோனா நோய்த் தொற்று அபாயம் காரணமாக வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவவ் ஊர்களுக்கு திரும்பினர். அரசு போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்து கொடுக்காவிட்டாலும், நடைபயணமாகவே பல நூறு கிலோமீட்டர்களை குழந்தைகளோடும், சுமைகளோடும் நடந்தே கடந்தனர். ஆனால், குஜராத்தில் மட்டும் சில காண்ட்ராக்டரக்களை வற்புறுத்தி தங்கள் வயல்களில் கரும்பு அறுவடைக்காக விவசாயிகளை தங்க வைத்தனர். ஆலைகள் இயங்கும் என்ற நிலையில் டன் ஒன்றுக்கு 238 ரூபாய் என்பதற்கு பதிலாக டன் ஒன்றுக்கு 300 ரூபாய் என்று ஆசைகாட்டப்பட்டது. தங்கியவர்களில் பலர் தாங்கள் வாங்கிய முன்பணத்தை செலுத்தும்படி மிரட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தொழிற்சாலைகளை மூட உத்தரவிட்ட நிலையிலும், பர்தோலி, காந்தேவி, சல்தான் ஆகிய ஊர்களில் உள்ள மிகப்பெரிய சர்க்கரை ஆலைகள் எப்படி இயங்க அனுமதிக்கப்பட்டன என்பது புரியாத புதிராக இருக்கிறது.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply