Home > செய்திகள் > அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்திலிருந்து மக்களின் உயிர்களை காத்திட தமிழக அரசு மருத்துவமனைகளில், மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவப் பணியாளர்களும் , அல்லும் பகலும் அயராது தம் உயிரைத் துச்சமென மதித்து அரும் பணியாற்றி வருகின்றனர்.

அரசுத் துறையிலும் தனியார் துறையிலும் இவ்வாறு அயராது பணியாற்றி வரும் அனைவருடனும் தமிழக அரசு தோளோடு தோள் நின்று அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

இவ்வாறு களப்பணி ஆற்றி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண தொகை இணையும் பணிபுரிந்து வருபவர்களை ஊக்கப்படுத்த ஊக்கத்தொகையும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவு படி வழங்கியுள்ளது.

இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

இந்த நிலையில் சில நோயாளிகளின் உயிர் இழக்க நேரிடும் போது, மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பிற பணியாளர்களை , நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவங்கள் சில இடங்களில் நடந்துள்ளது.

மருத்துவமனைகளில் உயிரை காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் சில தருணங்களில் உயிரிழப்பு தவிர்க்க இயலாததாகிறது.

இச்சூழலில் உணர்ச்சிவசப்பட்டு மருத்துவர்களிடமும், மருத்துவமனை பணியாளர்கள் இடமும் தரக்குறைவாக நடந்து கொள்வது அவர்கள் ஆட்சி வரும் சேவையை இழிவு படுத்துவதாக அமைந்தால் இத்தகைய செயல்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

இச்செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல் துறை மூலமாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மருத்துவர்களும் செவிலியர்களும் மருத்துவ பணியாளர்கள் பெரும் சேவை செய்துவரும் நிலையில் ஒரு சில மருத்துவமனைகள் இப்பெயரில் சூழலை தவறாக பயன்படுத்திக் கொண்டு நோயாளிகளை அதிக கட்டணம் வசூலிப்பதாகவும், காப்பீட்டு திட்ட பயனாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்காமல் அவர்களிடம் கட்டணம் கேட்பதாகவும் சில செய்திகள் வந்துள்ளன.

இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை!

மருத்துவமனைகளையும், மருத்துவர்களையும் பாதிக்காது அவர்கள் நற்பணி தொடர உறுதுணையாக இருக்க கூடிய அதே நேரத்தில் பொதுமக்களின் அதிக கட்டணம் கோரி லாபம் அடைய நினைக்கும் மருத்துவமனைகள் மீதும் மற்றவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் தமிழக அரசு தயங்காது.

தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் படி இந்த மருத்துவமனைகளில் உரிமம் ரத்து செய்யப் படுவதோடு சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply