Home > செய்திகள் > 6 மாவட்டங்களில் இன்று கனமழை..

6 மாவட்டங்களில் இன்று கனமழை..

இன்று கனமழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் இந்த வாரம் தொடக்கத்தில் இருந்து வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மற்றும் வட மாவட்டங்களில் மழை பரவலாக பெய்கிறது

சென்னை மற்றும் புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், வேப்பேரி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் முதலில் தூறலும், அதன்பின்னர் கனமழையும் பெய்தது.

இதேபோல், கோயம்பேடு, மதுரவாயல், முகப்பேர், ஆவடி, போரூர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் விட்டுவிட்டு மிதமான மழை பெய்தது.

ஒரு சில இடங்களில் தண்ணீர் ஆறாக ஓடியது, பல இடங்களில் சாலையில் இருந்த பள்ளங்களில் மழை நீர் தேங்கியது.

இந்தநிலையில் தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக பகுதியில் நிலவும் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் (நாளை) பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

அடுத்த 72 மணி நேரத்தில் (நாளை மறுதினம்) கிழக்கு திசை காற்றில் நிலவும் சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தமட்டில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

You may also like
‘மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் புயல்’
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
மழை பெய்வது ஏன்?
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
காற்றழுத்த தாழ்வு பகுதியால் நவ.23 இல் கனமழை
சாலைகளில் மழைநீர்
சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Leave a Reply