Home > செய்திகள் > தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்

தோனிக்காக வீட்டையே மாற்றிய வெறித்தனமான ரசிகர்

home of dhoni fan

கிரிக்கெட் வீரர் தோனியின் தீவிர ரசிகர் ஒருவர், ரூ.1.50 லட்சம் செலவு செய்து தனது வீட்டை மஞ்சள் நிறத்திற்கு மாற்றிய சம்பவம் வியப்படையச் செய்துள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கிடக்கும் ஒரே விஷயம் ஐபிஎல் போட்டி. தான் குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ்க்கும் தல தோனிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.

இந்த மேட்ச் ஜெயிக்குமா என ரசிகர்கள் துவண்டு கிடக்கும் நேரத்தில், அதிரடியாக விளையாடி பல போட்டிகளை ஜெயிக்க வைத்த தோனி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், தோனி மீதான பேரன்பில் ரசிகர் ஒருவர் அவரது வீட்டையே மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசிய சம்பவம் தற்போது வைரல் ஆகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே அரங்கூர் கிராமத்தை சேர்ந்த கோபிகிருஷ்ணன், துபாயில் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருக்கிறார்.

தோனி மீது அளவுக் கடந்த அன்பைக் கொண்ட இவர், அதனை வெளிப்படுத்தும் விதமாக சுமார் ரூ.1.50 செலவு செய்து தனது வீடு முழுவதையும் சிஎஸ்கே அணியின் அடையாளமான மஞ்சள் நிறத்தில் வண்ணம் பூசியுள்ளார்.

அதோடு தோனியின் படத்தையும் சிஎஸ்கே லோகோவான சிங்கத்தையும் சுவரில் வரைந்திருக்கிறார்.

மேலும், அந்த வீட்டுக்கு “HOME OF DHONI FAN” என்றும் பெயர் சூட்டியுள்ளார். அந்த வீட்டை சுற்று வட்டார பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

You may also like
பிளே ஆஃப் செல்லும் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?
சிஎஸ்கே வீரர்கள்
பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?
சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ்

0 Response

  1. Pingback : வளர்பிறையில் கறை எதற்கு ?- வைரமுத்து - Puthiyamugam

Leave a Reply