Home > செய்திகள் > மின்சார கார்- புதிய அத்தியாயத்தை தொடங்கிய ஹூண்டாய்

மின்சார கார்- புதிய அத்தியாயத்தை தொடங்கிய ஹூண்டாய்

மின்சார கார்களுக்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை உருவாக்கியுள்ளது ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்.

மின்சாரக் கார்களுக்கான சந்தை சமீபகாலமாக அதிக கவனத்தைப் பெற்று வருகின்றது. இனி மின்சாரக் கார்கள்தான் சாலைகளை அலங்கரிக்கப் போகின்றன.

இதனால், பல முன்னணி நிறுவனங்கள் மின்சார கார் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள பெட்ரோல், டீசல் கார்களின் கட்டமைப்புக் கொள்கையைப் பின்பற்றியே உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மின்சார கார்களுக்கான பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது ஹூண்டாய் இ-ஜிஎம்பி (E-GMP) என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றது.

அதிக செயல்திறன் மிக்க மின்சார கார்கள் இந்த புதிய கட்டமைப்புக் கொள்கையின் கீழ் உருவாக்கப்படவுள்ளது. இதில், அதிக செயல்திறன் மிக்க பேட்டரி பொருத்தப்பட இருக்கின்றன.

அதேபோல, அதிக செயல்திறனையும், அதிக தூரம் பயணிக்கும் வகையிலும் மின்னணு சாதனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. அதாவது, பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால், 500 கி.மீ தூரத்திற்கும் மேல் பயணிக்க முடியும்.

இந்த பேட்டரியை 18 நிமிடங்களில் 80 சதவீதம் அளவிற்கு சார்ஜ் செய்ய முடியும். அதிக செயல்திறனுடன், நீண்டதூர பயணம் செய்ய முடியும். இந்த வகை கார் 3.5 வினாடிகளில் 100 கி.மீ வேகத்தை எட்டும். மேலும், மணிக்கு 260 கி.மீ வேகம் வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply