Home > செய்திகள் > பாதிப்பில் தமிழகம் 3-வது இடம்: கடந்த 24 மணிநேரத்தில் 10 மாநிலங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை…மத்திய சுகாதாரத்துறை தகவல்

பாதிப்பில் தமிழகம் 3-வது இடம்: கடந்த 24 மணிநேரத்தில் 10 மாநிலங்களில் புதிதாக கொரோனா தொற்று இல்லை…மத்திய சுகாதாரத்துறை தகவல்

இந்தியா உள்ளிட்ட 210 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. முதலில் 21 நாட்கள், பின்னர் 19 நாட்கள், அடுத்தது 14 நாட்கள் என 3 கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் அனைத்து தொழில் நிறுவனங்களும் மூடப்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டேதான் வருகிறது. இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10 மாநிலங்களில் புதிய தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் 4 மாநிலங்கள் இதுவரை கொரோனா தொற்றில்லாத மாநிலங்களாக உள்ளது. நாடு முழுவதும் 4362 கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் லேசான அறிகுறி உள்ள 3 லட்சத்து 46 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அருணாச்சல பிரதேசம், அசாம், மத்தியப்பிரதேசம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 10 மாநிலங்களில் புதிதாக கொரோனா தொற்று யாருக்கும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67,152 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,206 பேர் உயிரிழந்த நிலையில், 20, 917 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்தியளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் பட்டியலில் கடந்த 2 வாரங்களாக 4-வது இடத்தில் இருந்த தமிழகம் இன்று 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. குஜராத் இரண்டாவது இடத்தில் உள்ளது.

You may also like
வேளாண் சீர்திருத்த சட்டங்கள் – பிரதமர் மோடி விளக்கம்
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?

Leave a Reply