Home > அரசியல் > போதிய டெஸ்டிங் வசதி இல்லை- புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையால் பீகார் அரசுக்கு நெருக்கடி

போதிய டெஸ்டிங் வசதி இல்லை- புலம்பெயர் தொழிலாளர்களின் வருகையால் பீகார் அரசுக்கு நெருக்கடி

கடந்த 10 நாளில் மட்டும் 1.10 லட்சம் புலம்பெயர் தொழிலளர்கள் பீகார் மாநிலத்தை வந்தடைந்துள்ளனர். மேலும், கூடுதலாக 85,000 பேர் இந்த மாத இறுதிக்குள் வருவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, அந்த மாநிலத்திற்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதிகபட்சமாக ஒரு நாளைக்கு சுமார் 1,800 கொரோனா டெஸ்டிங் செய்யும் அளவிற்கு தான் பீகார் சுகாதாரத் துறையின் திறன் உள்ளது. இதுநாள் வரையில், ஆறு அரசு மருத்துவமனைகள் மற்றும் சுயாதீன அமைப்பான ராஜேந்திர மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் தினமும் சராசரியாக 1,400-1,500 சோதனைகள் எடுக்கப்பட்டு வந்தது. பணம் செலுத்த விரும்பும் எவருக்கும் சோதனைகள் நடத்த இரண்டு தனியார் ஆய்வகங்களை பீகார் அரசாங்கம் அனுமதித்துள்ளது .

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply