Home > செய்திகள் > சுதந்திரதின விழா கூட்டம் கூட வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திரதின விழா கூட்டம் கூட வேண்டாம் – தமிழக அரசு அறிவிப்பு

இந்தியாவின் 74-வது சுதந்திர தினம், நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசு சார்பில் நடக்கும் விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார். சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், முதல்வர் பழனிச்சாமி நாளை காலை 8.45மணிக்கு தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரையாற்றுகிறார். கல்பனா சாவ்லா விருது, அப்துல் கலாம் விருது, முதல்வரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவையாற்றிய தனிநபர், நிறுவனம், மருத்துவர், சிறப்பாக செயல்பட்ட உள்ளாட்சி அமைப்பு களுக்கான விருதுகளையும் முதல்வர் வழங்குகிறார். சுதந்திர தின விழா குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு

ஆண்டுதோறும் சுதந்திர தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள், மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு கொரானா தொற்றால் நிலவும் அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் யாரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மாவட்டம்தோறும் 10 சுதந்திர போராட்ட தியாகிகளின் வீடுகளுக்கே சென்று பொது சுகாதார வழிமுறைகளை பின்பற்றி பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்களுக்கு இனிப்பு வழங்க சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னை கோட்டை கொத்தளத்தில் நடக்கும் நிகழ்ச்சியில், கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட முன்களப் பணியாளர்களை சிறப்பிக்கும் விதமாக அவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்களை முதல்வர் பழனிசாமி வழங்க உள்ளார். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கரோனா நோய்த் தொற்றை தவிர்க்கும் விதமாக இந்த ஆண்டு பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள் யாரும் விழாவுக்கு நேரில் வரவேண்டாம். சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்டு மகிழலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like
“அரியர் மாணவர்களின் அரசனே” என முதல்வரை புகழ்ந்துள்ளனர்
கொரானா கற்றுகொடுத்த பாடம் -குடியரசு தலைவர் சுதந்திர தின உரை
சுதந்திர தினவிழாவில் கூட்டம் கூடாது-மத்திய அரசு கடிதம்
இரமலான் திருநாள் – திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து – முதல்வர் வாழ்த்து

Leave a Reply