Home > செய்திகள் > இந்தியாவில் 2.26 லட்சம் பேருக்கு கரோனா!

இந்தியாவில் 2.26 லட்சம் பேருக்கு கரோனா!

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.26 லட்சத்தைத் தாண்டியது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இருப்பினும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இன்று (05/06/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் 2,26,770 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,075- லிருந்து 6,348 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,04,107 லிருந்து 1,09,462 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதித்த 1,10,960 பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 77,793 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 33,681 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 2,710 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல் தமிழகத்தில் 27,256, டெல்லியில் 25,004, குஜராத்தில் 18,584, ராஜஸ்தானில் 9,862, மத்திய பிரதேசத்தில் 8,762, உத்தரப்பிரதேசத்தில் 9,237, ஆந்திராவில் 4,223, தெலங்கானாவில் 3,147, கர்நாடகாவில் 4,320, கேரளாவில் 1,588, புதுச்சேரியில் 82 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 9,851 பேருக்கு கரோனா உறுதியானது. அதேபோல் இந்தியாவில் 34 மணிநேரத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை இல்லாத அளவுக்கு 273 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

You may also like
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
நிழல்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்
அஸ்திவாரத்திற்கு ஒரு ஆராதனை – ஆதனூர் சோழன் கவிதைகள்
தனிமையின் வரங்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply