Home > செய்திகள் > 2021 ஜனவரி மாதம் முதல் ‘தங்கரதம்’

2021 ஜனவரி மாதம் முதல் ‘தங்கரதம்’

கடந்த 2007-ம் ஆண்டில் “தங்கரதம்” எனப் பொருள் படும் “கோல்டன் சேரியாட்” எனும் புதிய சொகுசு ரயில் அறிமுகம் செய்யப்பட்டது. அரண்மனை போல் உள் கட்டமைப்புடைய இந்த ரயில் தென்னிந்தியாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால், நிர்வாக காரணங்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ரயில் கடந்த சில ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தங்கரதம் ரயில் ஐ.ஆர்.சி.டி.சி.யிடம் ஒப்படைக்கப்பட்டு. ஏற்கனவே பல ஆடம்பர வசதிகளை கொண்டிருந்த இந்த ரயிலை தற்போது கூடுதலாகப் பல வசதிகளுடன் புதுப்பித்துள்ளனர்.

இந்த ரயிலில், மதுபானங்கள் அடங்கிய மதுபானக்கூடம் உள்ளது. ரிலாக்சாக மது அருந்தலாம். கை,கால்,முதுகு அமுக்கிவிட மசாஜ் சென்டர் உள்ளது.

மேலும் உடற்பயிற்சிக் கூடம், உணவுக் கூடம், குளியல் அறைகள், சொகுசு படுக்கை மெத்தைகள், ஸ்மார்ட் டி.விக்கள்., என ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

வருகிற 2021 ஜனவரி மாதம் முதல் ‘தங்கரதம்’ சுற்றுலா சொகுசு ரயில் இயக்கப்படவுள்ளது.

“பிரைட் ஆப் கர்நாடகா’ என்ற பெயரில் 7 நாட்கள் பயணமாக மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்கா, சிக்மகளூர், ஹம்பி, பட்டடக்கல் வழியாக கோவாவுக்கு செல்கிறது.

‘ஜுவல் ஆப் சவுத்’ என்ற பெயரில் 7 நாட்கள் பயணமாக மைசூரில் இருந்து புறப்பட்டு ஹம்பி, மாமல்லபுரம், தஞ்சாவூர், செட்டிநாடு, குமரகம் மற்றும் கொச்சிக்கு செல்கிறது. ‘கிளிம்ப்சஸ் ஆப் கர்நாடகா’ என்ற பெயரில் 4 நாட்கள் பயணமாக மைசூரில் இருந்து புறப்பட்டு பந்திப்பூர் தேசிய பூங்காவுக்கும், ஹம்பிக்கும் இந்த ரயில் செல்கிறது”.

இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணம் மற்றும் சலுகை பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள 8287931970 மற்றும் 8287931974 ஆகிய எண்களில் சென்னை அலுவலகத்தையும், 8287931977 என்ற எண்ணில் மதுரை அலுவலகத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

You may also like
சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்
இன்று முதல் இயங்குகிறது மின்சார ரயில்சேவை
தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட் புக் செய்தால் இந்தியில் மெசேஜ்
சென்னை உட்பட முக்கிய நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை: இன்று மாலை முன்பதிவு தொடக்கம்

Leave a Reply