Home > செய்திகள் > கனிமொழி கொரோனா வார்டுக்குள் நலம் விசாரித்தார்!

கனிமொழி கொரோனா வார்டுக்குள் நலம் விசாரித்தார்!

பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து திடீரென கொரோனா வார்டுக்குள் விசிட் செய்தார் திமுக எம்பி கனிமொழி. அங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம் “எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று நலம் விசாரித்தார்.

சென்னையில் கொரோனா பரவல் தாண்டவமாடியபோதே, தூத்துக்குடியை தொற்றில்லாமல் பாதுகாக்க கனிமொழி எம்பி முடிவெடுத்துவிட்டார்.

அதற்காக, தன்னுடைய தொகுதியில் 2 வாரங்களாகவே முகாமிட்டு வருகிறார். தன்னுடைய தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்துவருகிறார்.

இதற்காகவே 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார். இதில் ஒன்றை தனக்கான வீடாகவும், இன்னொன்றை ஆபீசாகவும் பயன்படுத்தி வருகிறார். அதனால், அந்த வீட்டில் காலை முதல் இரவு வரை எந்நேரமும் மக்கள் கோரிக்கையுடன் காத்து கிடக்கிறார்கள். யார் யார் எந்த கிராமம் என்றெல்லாம் பார்க்காமல், அனைவரின் கோரிக்கைகளும் உடனுக்குடன் தீர்வு கிடைக்கிறது.

கிராமம், கிராமமாக செல்கிறார். வீடு வீடாக செல்கிறார். இதனால், ஏராளமான இளம் பெண்கள், முதியோர்களை சந்தித்து, தொற்றில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது, தடுப்பூசியினால் என்னென்ன நன்மைகள், என்றெல்லாம் பொறுமையாக எடுத்து விவரிக்கிறார். அந்த வகையில், தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திடீரென கொரோனா பாதுகாப்பு டிரஸ் அணிந்து, கொரோனா வார்டுக்குள் நுழைந்துவிட்டார் கனிமொழி.

அங்கே சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அக்கறையுடன் நலம் விசாரித்துள்ளார். முதலில் மருத்துவமனையை ஆய்வு செய்யதான் சென்றார். ஆனால், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கான தேவைகள், அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவர்களின் உடல்நலம் குறித்தும் நேரிலேயே விசாரிக்க வேண்டும் என்பதாலேயே பாதுகாப்பு உடை அணிந்து வார்டுக்குள் சென்றுள்ளார் கனிமொழி.

கவச உடையுடன் கனிமொழி வார்டுக்குள் நுழைந்ததுமே, சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளி ஒருவர், தன்னுடைய செல்போனில் இதை போட்டோ எடுத்துவிட்டார். அதுதான் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது!

இப்படித்தான், நடந்து முடிந்த தேர்தலின்போது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார் கனிமொழி. டிசம்பர் மாசமே தன்னுடைய பிரச்சாரத்தை முதல்நபராக தொடங்கிவிட்டார் கனிமொழி. பிரச்சாரத்தின் கடைசி நாளின் பொது கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து, ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது டாக்டர்கள் நீங்கள் ஓட்டுப்போட போக வேண்டாம் என்று அட்வைஸ் தந்திருந்தார்கள்.

ஆனாலும் பாதுகாப்பு உடைகள் அணிந்து, கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில், வாக்குச்சாவடி சென்று தன்னுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இப்போதுள்ளதைவிட அப்போது தொற்று வீரியம் அதிகமாக இருந்தது. பாதுகாப்பு கவசத்துடன் கனிமொழி ஓட்டுப்போட வந்தது, தைரியமான செயலாக பார்க்கப்பட்டது. மக்களிடமும் பேசப்பட்டது.

இப்போதும் அதுபோலவே, பிபிஇ பாதுகாப்பு டிரஸ் அணிந்து நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கோவை மருத்துவமனையில் பாதுகாப்பு உடையுடன் கொரோனா வார்டுக்குள் போய் பரபரப்பை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கனிமொழியும் கொரோனா வார்டுக்குள் பாதுகாப்பு உடையுடன் நுழைந்து நோயாளிகளுக்கு நம்பிக்கை ஊட்டியிருக்கிறார்.

You may also like
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் எஸ்.சி, எஸ்.டி., ஓபிசி., பெண்களுக்கு உரிய இடம் ஒதுக்க கி.வீரமணி அறிக்கை!
1975 லேயே தமிழனுக்கு கம்யூட்டரை அறிமுகப்படுத்திய கலைஞர் – சாந்தி நாராயணன்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 2 – உறைந்து நின்ற உருவம் – Govi.Lenin
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் – 1 – Govi.Lenin

Leave a Reply