Home > செய்திகள் > மோடி பேச்சை மதிக்காத கர்நாடகா பாஜக அரசு – செய்தி வைரலானதும் வழக்கு பதிவு செய்த போலீஸ்!

மோடி பேச்சை மதிக்காத கர்நாடகா பாஜக அரசு – செய்தி வைரலானதும் வழக்கு பதிவு செய்த போலீஸ்!

கர்நாடகா மாநிலத்தில் கலாபுர்கி மாவட்டத்தை கொரோனா நோய்க்கு அதிகமாக உயிர்ப்பலி நிகழும் ஹாட்ஸ்பாட் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையிலும் கோவில் திருவிழாவை நடத்த அந்த மாநில அரசு அனுமதி அளித்தது. இந்தச் செய்தி சமூகவலைத்தளங்ளிலும் ஊடகங்களிலும் வைரலானதும் திருவிழாவை நடத்தியவர்கள் மீது போலிஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. கலாபுர்கி மாவட்டம் சித்தாபூர் கிராமத்தில் உள்ளது சித்தலிங்கேஸ்வரா கோவில். இந்தக் கோவிலின் தேர்த்திருவிழா நடைபெற்றதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் அனுஷா ரவி என்ற பத்திரிகையாளர் வீடியோவுடன் ட்வீட் செய்திருந்தார். இதையடுத்து இந்தச் செய்தி வைரலாகியது. பிரதமர் மோடி தனது இந்தியாவில் கொரோனா நோயை கட்டுப்படுத்த சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நோய் பரவலைத் தடுக்க வேண்டும் என்று அறிவுரை கூறிவருகிறார். ஆனால், அவருடைய கட்சி ஆளும் மாநிலத்திலேயே அவருடைய உத்தரவுக்கு மாறாக, கொரோனா நோய் பரவுவதற்கு வசதியாக தேர்த்திருவிழாவை நடத்தியிருப்பது வெட்கக்கேடு என்று சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசுக்கும், தங்களுக்கும் இதில் தொடர்பு இல்லை என்பதுபோல திருவிழா ஏற்பாட்டாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

You may also like
தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமன்னா
கர்னாடகாவில் பள்ளிகளை தத்தெடுத்த தமிழ் நடிகர்

Leave a Reply