Home > செய்திகள் > பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன்

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கேரள முதல்வர் பினராயி விஜயன்

கொரானா நோய்த் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு நாள் மாலையும் பத்திரிகையாளர்களை இந்தியாவில்சந்திக்கும் ஒரே முதல்வர் கேரள முதல்வர் பினராயி விஜயன் மட்டுமே தினந்தோறும் கொரானா நிலவரம் பற்றிஅதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதும், அதன்பிறகு மாலை நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பது வழக்கம். சுமார் ஒரு மணி நேரம் நடக்கும் செய்தியாளர்கள் சந்திப்பில்,  கொரானா பாதிப்புகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் பினராயி விஜயன் பேசுவார். அதன் பிறகு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பார். 

நேற்று மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது பினராயி விஜயன் கூறுகையில், “இன்று 702 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 745 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இப்போது 9,609 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 10,049 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். மாநிலம் முழுவதும் 1,55,148 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகினனர். 495 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன” என்றார்

பைல் படம்

பின்னர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பினராயி விஜயன் பேசுகையில், கொரானா சம்பந்தமாக அனைத்து துறை மாநிலஅதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. அதில் கொரானா பரவலை தடுக்க முழு லாக்டெளன் பரிகாரம் இல்லை எனக் கூறினார்கள். எனவே தடுப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. படுக்கையில் உள்ள பிற நோயாளிகளை வீட்டில் இருந்து மாற்றி வேறு இடங்களில் வைத்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு நோயாளிகளின் விருப்பம் தான் முக்கியம்” என்றார்.அப்போது ஒரு செய்தியாளர், தங்கம் கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை NIA இதுவரை 15 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளது. இதில் அரசுக்கு ஆதங்கம் உள்ளதா எனக் கேட்டார். அதற்கு பினராயி விஜயன், எங்களுக்கு எந்தவித ஆதங்கமும் இல்லை என்றார் மேலும் கூறுகையில்  விசாரணை அதன் வழியில் செல்லட்டும். விசாரணையில் என்ன நிலைபாடு எடுக்க வேண்டும் என்று NIA தான் முடிவு செய்வார்கள் என்றார்.

பணிக்கு ஆள் நியமனம் செய்தது அல்லாமல், தங்கம் கடத்தல் வழக்கில் சிவசங்கரன் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அல்லது அதுபற்றிய தகவல் தெரியவந்ததா என ஒரு செய்தியாளர் கேட்டதற்கு, இது அபத்தமான கேள்வி. NIA விசாரணை நடக்கும் போது எனக்கு தெரிந்திருக்கிறது என்பதா முக்கியம். விசாரணை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும் என்றார் மற்றொரு செய்தியாளர்

கேரள முதல்வர் பினராயி விஜயன்

தங்கம் கடத்தல் வழக்கில் ஆளும்மார்க்சிஸ்ட் மற்றும் BJPக்கு இடையே ஒரு புரிதல் ஏற்படுள்ளது. வரும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு இருவரும் சமாதனாம் ஆகியுள்ளார்கள் எனக் கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளாரே கேட்ட போது அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார் பினராயி விஜயன். அப்போது அந்த செய்தியாளர், நான் கேட்டது சி.எம்-க்கு கேட்டதா, என்றார். கேள்வி எனக்கு கேட்டது அது பதில் சொல்ல தகுதி இல்லாத கேள்வி என்பதால், அது பற்றி சொல்லவில்லை” என்றார். பத்திரிகையாளர்கள் சந்திப்பில் எந்தக் கேள்வி கேட்டாலும் தயக்கம் இன்றி பதில் சொல்லும் கேரள முதல்வர்பினராயி விஜயனிடம் இருந்து இந்தப் பதிலை எதிர்பார்க்காத செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

You may also like
தமிழக மக்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் – முதலமைச்சர் பழனிசாமி
முதல்வர் பினராயி விஜயன்
காய்கறிகளுக்கு அடிப்படை விலை – கேரள அரசு அறிவிப்பு
கேரளாவில் மேலும் 7,673 பேருக்கு கொரோனா
10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்
10 ஆயிரம் கோடி ரூபாயில்14 ஒப்பந்தங்கள்

Leave a Reply