Home > செய்திகள் > கொரிய தமிழ்ச் சங்க விழாவுக்கு இந்தியத்தூதர் அனுப்பிய வாழ்த்து செய்தி

கொரிய தமிழ்ச் சங்க விழாவுக்கு இந்தியத்தூதர் அனுப்பிய வாழ்த்து செய்தி

சியோல், தென்கொரியா, திருவள்ளுவர் ஆண்டு 2052, தைத்திங்கள் 18-ம் நாள் ஞாயிறன்று (31 சனவரி 2021) தமிழர் திருநாள் – 2021 இணையவழி இயங்கலையில் நடைபெற்ற கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 நிகழ்விற்கு தென்கொரியாவிற்கான இந்தியத்தூதர் மாண்புமிகு ஸ்ரீபிரியா ரெங்கநாதன் அவர்கள் தமிழில் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார்.

நிகழ்வு வெற்றிபெற வாழ்த்து தெரிவித்த அவர், கொரியாவில் நடைபெறும் பொங்கல் நிகழ்வு தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொரிய மக்களிடையே எடுத்துச்செல்லும் பலமாக அமைகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார். வாழ்த்து தெரிவித்தமைக்காக தூதருக்கு நிகழ்வின் முகவுரையிலும் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் தலைவர் உரையிலும் கொரியவாழ் தமிழ் மக்கள் சார்பிலும் தமிழ்கூறும் நல்லுலகின் சார்பிலும்  கொரிய தமிழ்ச் சங்கம் உள்ளார்ந்த நன்றியை தெரிவித்தது.

You may also like
கொரிய தமிழ்ச்சங்க பொங்கல் விழாவுக்கு, கவிஞர் வைரமுத்து, நக்கீரன் கோபால் வாழ்த்து!
கொரியா தமிழ்ச் சங்கத்தின் தமிழ் புத்தாண்டு விழா!
கொரியாவாழ் தமிழரின் கவிதை நூல் வெளியீட்டு விழா
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் விழாவில் சங்கத் தலைவர் உரை

Leave a Reply