Home > செய்திகள் > வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை

வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க அவசியமில்லை

தமிழ்நாட்டில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்த மாநில அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தற்போது தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி மருந்துகளை பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது.

மேலும், நீதிமன்ற வளாகங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சென்னை உயர் நீதிமன்றத்திலும், பார் கவுன்சிலிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்கு தமிழ்நாடு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மருத்துவ ரீதியாக தேவைப்படுவோருக்கு தடுப்பூசி செலுத்துவது என்பது தவிர்க்க முடியாதது என்பதால், நீதிபதிகள், வழக்கறிஞர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like
இந்தியாவின் சாபக்கேடு அதன் நீதிமன்றங்கள்!
ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா

Leave a Reply