Home > செய்திகள் > “நேரக் கட்டுப்பாட்டை தாண்டி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை”

“நேரக் கட்டுப்பாட்டை தாண்டி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை”

தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதன் நேரக் கட்டுப்பாடு குறித்து சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தீபாவளி பண்டிகை களைக்கட்டியுள்ள நிலையில் ஜவுளி கடைகள், நகைக்கடைகள் என கூட்டம் அலைமோத தொடங்கியுள்ளது.

மக்கள் கொரோனா அச்சமின்றி இயல்பு வாழ்க்கைக்கு திருப்பியுள்ளதால் தீபாவளி பண்டிகையை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த சூழலில் தான் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. இருப்பினும் தமிழகத்தில் பட்டாசு வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

காலை 6 மணிமுதல் 7 வரையிலும், மாலை 7 மணிமுதல் 8 மணிவரையிலும் பட்டாசு வெடிக்க நேரம் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில் அரசு நிர்ணயித்த நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். நேரக் கட்டுப்பாட்டை தாண்டி பட்டாசு வெடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோல் தீபாவளியையொட்டி திநகரில் 100 சிசிடிவி கேமிராக்கள், 500 போலீசார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply