Home > செய்திகள் > ஆய்வுக்கு போன அமைச்சர்களின் அஞ்சலி

ஆய்வுக்கு போன அமைச்சர்களின் அஞ்சலி

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்தவர், சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் கொரோனா தொற்றால் இறந்துபோனதால் அவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுத் திரும்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் சோதனைகள் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் துவங்கப்பட்டன.

இரு வாரங்களுக்கு முன்பு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் டெஸ்ட்களை செய்துவரும் நிலையில், நேற்று முதல் துணை சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனைகள் துவங்கப்பட்டுள்ளன.

இதை சுட்டிக் காட்டி, மாநகரங்களில் பரவிய கொரோனா தொற்று சமூகத்தொற்றாக மாறி கிராமங்களுக்கும் பரவியிருப்பதை உறுதிப்படுத்துவதாகச் சொல்கிறார்கள் மருத்துவத்துறையினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திவருகிறார். அந்த வகையில் கடந்த 27 ஆம் தேதி, கடலூர் மாவட்டத்திற்கு முதல்வர் வந்த அன்று, கடலூர் அரசு மருத்துவமனையில் தற்காலிக லேப் டெக்னீஷியனாக பணிசெய்யும் சந்தோஷ் என்ற இளைஞர் கொரோனா தொற்றால் இறந்துபோனார்.

இந்த நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தும் கடலூர் அரசு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய வந்தனர்.

அவர்கள் சென்ற வழியெங்கும் மருத்துவமனை நுழைவாயிலிலும், 30 வருடங்கள் பணிசெய்த ஊழியர் ஜெயராமன் கொரானா தொற்றால் இறந்துவிட்டதற்காக ஒட்டப்பட்டிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் அமைச்சர்களின் கண்ணில் பட்டன.

இதையடுத்து மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெயராமன் உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு அதிகாரிகளை அழைத்து ஆய்வுசெய்துட்டு திரும்பியுள்ளார்கள் அமைச்சர்கள்.

Leave a Reply