டெல்லியில் உள்ள நிஜாமுதின் மார்கசுக்கு செல்லாத முஸ்லிம்களையும் கொரோனா பாதிப்பு சோதனைக்காக டெல்லி போலீஸ் உதவியுடன் அதிகாரிகள் துன்புறுத்துகிறார்கள். இதற்கு, அரசு அதிகாரிகள் தினந்தோறும் பரப்பும் செய்திகளும், அவற்றை ஒலி, ஒளி பரப்பும் ஊடகங்களுமே காரணமாக இருக்கின்றன.
இஸ்லாமியர்களில் தப்லிகிகள் ஒரு பிரிவினர்தான். அதாவது தப்லிகிகள் முஸ்லிம்கள்தான் என்றாலும், எல்லா முஸ்லிம்களும் தப்லிகிகள் அல்ல என்று டெல்லி போலீஸுக்கு புரியவில்லை. இந்த உண்மையை டெல்லி போலீசுக்கு எடுத்துரைத்து, முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுக்க வேண்டும் என்று டெல்லி சிறுபான்மை கமிஷன் தலைவர் ஜபருல் இஸ்லாம் கானும், உறுப்பினர் கர்டார் சிங் கொச்சாரும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.