Home > செய்திகள் > கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்!

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்!

தமிழகம்-புதுவை கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக தமிழகம்-புதுவை கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும். நாழி(17.07.2020) தமிழகம்-புதுவை கடலோர மாவட்டங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுகள், திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் அஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வன்மை பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாடானையில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை, சின்னக்கல்லார் பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும், திருப்பத்தூர், மானாமதுரை பகுதிகளில் தலா செ.மீ பதிவாகியுள்ளது. அதேபோல், வால்பாறை, ஆர்.எஸ். மங்களம், பள்ளிப்பட்டு பகுதிகளில் தலா 3 செ.மீ மழையும், மேட்டூர், செய்யூர், திருத்துறைப்பூண்டி, இளையான்குடி, கோபிசெட்டிபாளையம், திருவண்ணாமலை, மரக்காணம், மற்றும் சோலையார் பகுதிகளில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்காக எச்சரிக்கை

ஜூலை 16(இன்று), வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு மற்றும் மத்திய கிழக்கு, வடகிழக்கு அரபிக்கடல் கடற்பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்திலும், தெற்கு குஜராத் மற்றும் மகாராஷ்டிரா, கேரளா மற்றும் லட்சத்தீவு, கர்நாடக கடற்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஜூலை 18 மற்றும் 19ம் தேதிகளில் தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like
அரசின் அன்றாட நடவடிக்கையில் தலையிட வேண்டாம் – முதல்வர் நாராயணசாமி
இயக்குனர் பா.ரஞ்சித்தின் அரைவேக்காடு அரசியல்….
சாலைகளில் மழைநீர்
தமிழகத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்
புரெவி புயல்- 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

Leave a Reply