Home > செய்திகள் > அந்தமான் தீவுக்கு பைபர் இணைய சேவை நாட்டுக்கு அர்பணித்தார் மோடி

அந்தமான் தீவுக்கு பைபர் இணைய சேவை நாட்டுக்கு அர்பணித்தார் மோடி

சென்னை- அந்தமான் இடையேயான பைபர் நெட் சேவையை பிரதமர் துவங்கிவைத்தார்.அந்தமான்-நிகோபர் தீவுகளில் அதிவேக இணையசேவை வசதி ஏற்படுத்த முடிவு செய்த மத்திய அரசு, சென்னையில் இருந்து அந்தமானுக்கு 1,224 கோடி ரூபாய் செலவில் 2,300 கி.மீ தொலைவுக்கு கடலுக்கு அடியில் கண்ணாடி இழை வடம் பதித்துள்ளது.2018ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், அதிவேக தொலைத்தொடா்பு இணையச் சேவை திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி ஆகஸ்ட் 10 காலை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

அப்போது உரையாற்றிய பிரதமர், அந்தமான் நிகோபாரின் 12 தீவுகளில், அதிக முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. முக்கிய விஷயமாக இருந்த மொபைல் மற்றும் இணைய தொடர்பு பிரச்னை இன்று தீர்க்கப்பட்டுள்ளன. தரைவழி, வான்வழி, கடல் வழி இணைப்பு பிரச்னையை தீர்க்க செயல்படுகிறோம். இதனால் அந்தமானில் சுற்றுலாத் துறை மேம்படும்.கடலுக்குள் சுமார் 2,300 கி.மீ தூரத்துக்கு கண்ணாடியிழை கேபிள் அமைக்கும் பணி நிறைவடைந்தது மிகவும் பாராட்டக்கூடியது. ஆழமான கடலில் அளவிடும் பணி, கேபிளின் தரத்தை பராமரிப்பது, சிறப்பு கப்பல்கள் மூலம் கேபிள் அமைத்தது போன்றவை மிகவும் எளிதான பணி அல்ல என்று பாராட்டு தெரிவித்தார்.

அந்தமான் & நிகோபார் தீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து நவீன உள்கட்டமைப்புகளும், கடல்சார் பொருளாதாரத்துக்கு மிக முக்கிய அம்சம். மீன்பிடித்தல், மீன் வளர்த்தல், கடற்பாசி வளர்ப்பு ஆகியவை கடல்சார் பொருளாதாரத்தில் முக்கிய பங்காக உள்ளன என்று பிரதமர் கூறினார். ஒரே நேரத்தில் 1,200 விமான பயணிகளை கையாளும் வகையில், போர்ட் பிளேயர் விமான நிலையம் இன்னும் சில மாதங்களில் தயாராகும் என்றும் உறுதியளித்தார்.

You may also like
வாக்களிக்கும் முன் இதை படிங்க…
பிரதமர் மோடி பயன்படுத்தும் மொபைல், சிம் கார்டு?
ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் என்கிறாரே மோடி. ஏன்?
நரேந்திரமோடி வெளிநாடு செல்லாத 2020

Leave a Reply