எக்ஸ்பிரஸ் ரயில்களில் ‘என்தோழி’திட்டம் தொடங்கிவைக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள் அவர்கள் வீடு சென்று சேரும் வரை பெண்போலீசாரால் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.
பெண் போலீஸ், பெண் பயணியின் தோழியைபோல் இருந்து பயணத்தின்போது ஏதேனும் இடையூறு அல்லது ஆபத்து ஏற்பட்டால், உடனடியாக அவர்களுக்கு ரயில்வே பாதுகாப்பு படையின் மூலம் உதவி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் 5பெண்கள் கொண்ட ரயில்வே பாதுகாப்புபடை போலீஸ் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அவர்கள் ரயில் புறப்படுவதற்கு முன்பாக, தனியாக பயணிக்கும் பெண்களின் தகவல்களை சேகரித்து, அவர்களிடம் நேரடியாக சென்று அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? எங்கு செல்கிறார்கள்? அவர்கள் முகவரி உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொள்வார்கள்.
பின்னர் பயணத்தில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் ரயில்வே பாதுகாப்புபடையின் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ள வேண்டும் என்றும், அதற்கான கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் வழங்குவார்கள்.
ரயில்புறப்பட்டதும், அடுத்த ரயில்வே கோட்டத்தில்உள்ள பாதுகாப்பு படையினருக்கு அந்த பெண்பயணிக்கும் பெட்டி மற்றும் இருக்கை எண் அனுப்பி வைக்கப்படுகிறது.
ரயில் அங்குநின்றதும், அங்கிருக்கும் ரெயில்வே பாதுகாப்புபடையினர் அந்த பெண்எந்த பிரச்சினையும் இன்றி பயணம் மேற் கொள்கிறாரா என்பதை உறுதிபடுத்தி கொள்கிறார்கள்.
இதன் மூலம் தனியாக பயணிக்கும் பெண்களுக்கு ரயில் பயணத்தில், ஒரு தோழியாக பெண் போலீசார் கூடவே இருக்கும் சூழ்நிலையை உருவாக்கப்பட்டுள்ளதற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.