Home > செய்திகள் > 1 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை! – இந்திய நிலவரம்

1 லட்சத்தை தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை! – இந்திய நிலவரம்

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 90 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 79,475 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 64,73,544 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 1,069 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 1,00,842 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 54,27,706 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 9,44,996 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You may also like
கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் : முதல்வர் அறிவிப்பு
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.
15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி