Home > அறிவியல் > இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவி : சாதனை படைத்த என்.ஐ.வி

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவி : சாதனை படைத்த என்.ஐ.வி

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.கொரோனா தொற்றை உடனுக்குடன் கண்டறிய உதவும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை இந்தியா சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்து வந்தது. ஆனால் அந்த கருவிகள் முறையாக செயல்படாமல் தவறுதலான முடிவுகளை அளித்தது. இதனை தொடர்ந்து சீனாவில் ரேபிட் கிட்களை பயன்படுத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தடைவிதித்தது. அதனை தொடர்ந்து கொரியாவிடம் இருந்து ரேபிட் கிட்களை இந்திய அரசு இறக்குமதி செய்தது. இந்த நெருக்கடியான சூழலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தேசிய வைராலஜி நிறுவனமும் இணைந்து கொரோனாவை கண்டறியும் ரேபிட் கிட்களை கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார் இந்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன். இந்த ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவி மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பின் முதல் கட்டமான ஒரு உடலில் ஆன்டிபாடி (நோய் எதிர்ப்புசக்தி) உருவாகியிருக்கிறதா என்பதைக் கண்டறியும்.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா

Leave a Reply