Home > செய்திகள் > வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் – மம்தா பானர்ஜி எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் – மம்தா பானர்ஜி எச்சரிக்கை

வேளாண் சட்டங்களை உடனடியாக வாபஸ் பெறவில்லை என்றார் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என மேற்குவங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில், “விவசாயிகள் வாழ்க்கை நிலை எனக்கு பெரிதும் கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்.

அந்த சட்டங்களை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், நாங்கள் மாநிலம் முழுவதும் மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம். ஆரம்பத்தில் இருந்தே இந்த சட்டங்களை நாங்கள் எதிர்த்து வருகிறோம்.

4-ஆம் தேதி அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கூட்டத்தை கூட்டியுள்ளோம். அதில், அத்தியாவசிய பொருட்கள் சட்டம், சாமானிய மக்களை எப்படி பாதிக்கிறது, விலை உயர்வுக்கு காரணமாகிறது என்பது பற்றி விவாதிப்போம்.

எல்லாவற்றையும் மத்திய அரசு விற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், ரயில்வே, ஏர் இந்தியா, நிலக்கரி நிறுவனம், பிஎஸ்என்எல், பெல், வங்கிகள் ஆகியவற்றை விற்க முடியாது. இந்த தனியார்மய கொள்கையை மத்திய அரசு உடனே வாபஸ் பெற வேண்டும்.

நாட்டின் கருவூலங்கள், பாஜகவின் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்படுவதை அனுமதிக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

You may also like
டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றினர் விவசாயிகள்!
போராட்டத்தை கைவிடுவது குறித்து இன்றே முடிவு எடுக்க வேண்டும் என்று அமைச்சர் தோமர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்மனம் கொண்ட மோடிக்கு காலம் பதில் சொல்லியே தீரும்!
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்!-

Leave a Reply