Home > செய்திகள் > தி மு க சொன்ன திருத்தங்களை ஏற்றால் புதிய கல்விக் கொள்கையை ஏற்கலாம் – கனிமொழி

தி மு க சொன்ன திருத்தங்களை ஏற்றால் புதிய கல்விக் கொள்கையை ஏற்கலாம் – கனிமொழி

தி மு க வும், பல்வேறு மாநிலங்களும் புதிய கல்விக் கொள்கையில் பல்வேறு திருத்தங்களை தெரிவித்துள்ளன. அவற்றை மத்திய அரசு ஏற்றால் அந்தக் கொள்கையை அமல்படுத்தலாம் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,

தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் மேற்கொள்வதற்காக திமுக ஒரு குழு அமைத்து பல்வேறு கருத்துக்களை கூறியது அந்த கருத்துக்கள் எதுவும் இதுவரை ஏற்கபடவில்லை, பல்வேறு மாநிலங்கள் இந்த கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கூறிய கருத்துக்கள் எதுவும் ஏற்கப்படவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

சமூகநீதிக்கு எதிரானதாகவும்,மொழி திணிப்பிற்ககாகவும், மாநிலங்களிடையே உரிமையை பறிக்கும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கை அமைந்துள்ளது என கூறியவர்

இந்த கோரனா தொற்று பரவிவரும் இந்த சூழலில் நீட் தேர்வை தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட வேண்டும் பின்னர் அது நிரந்தரமாக விலக்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் கோரனா தடுப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு எதிர்க் கட்சிகளின் கருத்துக்களை கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது.

இந்த காலத்தில் ஏற்படக்கூடிய குழப்பங்களை பட்டியளிடவே முடியாது என்ற அவர், 2021 ஆம் ஆண்டு தேர்தளுக்கான பிரச்சாரமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்களே தவிர மக்களை பாதுகாப்பதில் தமிழக அரசுக்கு அக்கறையில்லை என்று அவர் கூறினார்.

You may also like
அலங்காநல்லூரில் உதயநிதி பிறந்தநாள் விழா!
என்னதான் இருந்தாலும் ஜெயலலிதாவைப் போல வருமா?
அஸ்திவாரத்திற்கு ஒரு ஆராதனை – ஆதனூர் சோழன் கவிதைகள்
தனிமையின் வரங்கள் – ஆதனூர் சோழன் கவிதைகள்

Leave a Reply