Home > செய்திகள் > சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை

சென்னை மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு அனுமதி இல்லை

இந்தியாவில் கொரானாவின் தாக்கம் கடந்த பிப்ரவரியில் ஆரம்பித்து, கடந்த எட்டு மாதங்களாக மக்களை ஆக்கிரமித்து மக்கள் வாழ்க்கையை முடக்கியது தற்போது கொரானாவின் தாக்கம் குறைந்து கொண்டிருப்பதால்  ஊரடங்கும் தளர்த்தப்பட்டு முழுமையான தளர்வுகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

இருந்தபோதும் முகக் கவசங்கள், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுரை கூறினாலும் மக்கள்  அதைப் பின்பற்றுவதில்லை. அரசியல் கட்சிகளும் தங்களுடைய கூட்டங்களை வழக்கம்போல நடத்த ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் இங்கிலாந்தில் கொரானா வைரஸின் புதிய வடிவம் பரவி வருவதாக தகவல்கள் பரவும் நிலையில், இந்திய அரசு இங்கிலாந்துக்கு செல்லும், இங்கிலாந்திலிருந்து வரும் விமானங்களை தடை செய்துள்ளது.
இது இந்தியாவில் வேறு வகையிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

இந்தியாவில் கொரானா தாக்கத்தில் முதலிடத்தில் இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தில், மாநகராட்சிகளில் ஜனவரி 5 வரை இரவு நேர ஊரடங்கு தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல ராஜஸ்தான் அரசு புத்தாண்டு தினத்தை வீட்டிலேயே கொண்டாடவும், வெகுஜனக் கூட்டங்களைத் தவிர்க்கவும் மக்களை கேட்டுக்கொண்டிருக்கிறது.

கொரானா வைரஸ் தடுப்பூசி திட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் கூட்டத்தில் இன்று (டிசம்பர் 21) கலந்துகொண்ட ராஜஸ்தான் முதல்வர், மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தங்கள் வீடுகளுக்குள் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும், நெரிசல் மற்றும் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

இது அனைவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. அனைத்து மாநிலங்களுக்கும் உச்ச நீதிமன்றம் வழங்கிய கொரானா வழிகாட்டுதல்களை ராஜஸ்தான் அரசு கண்டிப்பாக செயல்படுத்தும்” என்று கூறியுள்ளார்

புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு இந்திய அளவில் சென்னை மெரினா கடற்கரை பிரபலமானது மெரினா கடற்கரை எட்டுமாதங்களாக பொதுமக்கள்பயன்பாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சில நாட்கள் முன்புதான் வாக்கிங் உள்ளிட்ட பயன்பாடுகளுக்காக திறந்துவிடப்பட்டது.

இந்நிலையில் ராஜஸ்தான் மகாராஷ்டிரா மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் 2021 புத்தாண்டு இரவுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதனால் மெரினா கடற்கரையில்2021 புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

Leave a Reply