Home > செய்திகள் > கஷ்டத்தை போக்கும் கடவுளுக்கு தடையா – பாஜக கண்டனம்

கஷ்டத்தை போக்கும் கடவுளுக்கு தடையா – பாஜக கண்டனம்

தமிழகம் முழுவதும் வரும் 22ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது கொரானா பரவலை தடுக்க விநாயகர்‌ சிலைகளை நிறுவுவதோ, விநாயகர்‌ சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்‌ செல்வதோ, சிலைகளை நீர் நிலைகளில்‌ கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ அமலில்‌ உள்ள நிலையில்‌ அனுமதிக்க இயலாது. மேலும், விநாயகர்‌ சதுர்த்தி பண்டிகையை அவரவர்‌ வீடுகளிலிலேயே கொண்டாட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு விழா நடைபெறும் என அறிவித்துள்ளார்.தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன், “இந்து மக்கள் அவரவர் குடும்பம் மற்றும் தொழில்களில் ஏற்படும் தடைகள் நீங்கிட விநாயகரைத் தான் வணங்குவார்கள். இப்போது தமிழக அரசு தடைகளை தகர்க்கும் கடவுளுக்கே தடைபோடுவது வேதனை அளிக்கக்கூடியது. விநாயகர் சிலை நிறுவி வழிபடுவதற்கு மட்டும் தடை என்பதை நீக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்படும் என்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “கொரானா தொற்று காரணமாக சுதந்திர தின கொண்டாட்டங்களே கட்டுபாட்டுடன் நடக்கின்றன. இதே காரணத்திற்காகத்தான் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தமிழக அரசு தடை செய்துள்ளது. உலகம் முழுவதுமே வழிபாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் தடையை மீறுவோம் என்றும், பொது இடங்களில் லட்சம் விநாயகர் சிலைகள் வைப்போம் என்றும் இந்து முன்னணி செய்துள்ள அறிவிப்பு ஆன்மீகம் அல்ல, கடைந்தெடுத்த மதவெறி அரசியலே. இச்செயல் வன்மையாக கண்டனத்திற்குரியது” என்று கூறியுள்ளார்.

You may also like
ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிட வாரிசுகள் நாங்கள் – அமித்ஷாவை தெறிக்க விட்ட ஸ்டாலின்!
அம்மன் ஆலயம் கட்ட உதவும் ஒசூர் திமுக எம்எல்ஏ சத்யா!
பாஜக கூட்டணி முன்னிலை
பாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது; அதற்கு தினேஷ் குண்டுராவ்
பாஜகவினால் தென்னிந்தியாவை நெருங்க முடியாது – தினேஷ் குண்டுராவ்

Leave a Reply