Home > செய்திகள் > வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வந்தால் பிசிஆர் கட்டாயம்- தமிழக அரசு

வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வந்தால் பிசிஆர் கட்டாயம்- தமிழக அரசு

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விமான பயணத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- * வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்தால் கொரோனாவை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். * வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். * விமானத்தில் பயணம் செய்யும், முன்பாகவே தமிழகத்தில் பயணிப்பதற்கான இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். * தமிழகம் திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் பரிசோதனை செய்யப்படும். * மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து தமிழகத்திதக்கு வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும். * வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பில் உலகின் மோசமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு 7வது இடம்!

You may also like
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
அற்புதங்களின் குவியல் அண்ணா!

Leave a Reply