Home > செய்திகள் > தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்துக்கு அனுமதி

தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்துக்கு அனுமதி

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளின் அடுத்தகட்டமாக மாநிலம் முழுமைக்கும் பேருந்து போக்குவரத்தும் ரயில் போக்குவரத்தும் செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செப்டம்பர் 2 அன்று அறிவித்துள்ளார்.

ஏற்கனவே செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்துக்கு பேருந்தில் செல்ல இயலாத நிலை இதனால் ஏற்பட்டிருந்தது.

இன்றைய சூழலில் தமிழகத்தில் மாவட்டங்ளுக்கு இடையிலான போக்குவரத்து அவசியமாக இருக்கும் நிலையில் ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்பட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்….தமிழ்நாட்டில் தற்போது மாவட்டத்துக்குள் மட்டும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு பணி நிமித்தமாக வியாபார நிமித்தமாக சென்றுவர கோரிக்கைகள் அரசுக்கு வந்துள்ளன.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயும் அரசு மற்றும் தனியார் பேருந்துப் போக்குவரத்து அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் அனுமதிக்கப்பட்ட தடங்களில் மாநிலங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்துக்கு ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 7 ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் பயணிகள் ரயில் போக்குவரத்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும் அவர், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தாலும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போதும் பொது இடங்களிலும் முகக் கவசம் அணிவது, வீட்டிலும் பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவது, வெளியிடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் கடைப்பிடிப்பது உள்ளிட்ட பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்றினால் நோய் தொற்று பரவாமல் தடுக்க முடியும். எனவே பொதுமக்கள் அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்

You may also like
கோயம்பேடு சந்தை வியாபாரிகள்
கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா
சென்னை
கொரோனா பாதிப்பு சென்னையில் மீண்டும் அதிகரிக்கிறது.
15 ஆம் தேதி முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள் திறக்கப்படுகின்றன.
பொழுதுபோக்கு பூங்கா திறக்க அனுமதி
covid 19
தமிழகத்தில் மேலும் 5,079 பேருக்கு கொரோனா! மொத்த பாதிப்பு 6.40 லட்சமானது

Leave a Reply