Home > செய்திகள் > வறுமைக்கோடு செழுமைக்கோடாக எங்கள் ஆட்சியில் மாற்றமடையும் – கமல்

வறுமைக்கோடு செழுமைக்கோடாக எங்கள் ஆட்சியில் மாற்றமடையும் – கமல்

சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  ஈடுபட்டு வருகிறார்.

இரண்டாவது கட்ட தேர்தல் பிரச்சாரத்தை சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று தொடங்கினார்.

மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மதுரையை இரண்டாவது தலைநகராக்குவேன் என்ற வாக்குறுதியை மதுரை பிரச்சாரத்தில் அறிவித்தார். அதன்பிறகு தொடர்ந்து பல்வேறு வாக்குறுதிகளையும் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் பொருளாதாரத்தை சீரமைப்பது உள்ளிட்ட 7 அம்ச செயல் திட்டங்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் இன்று (டிசம்பர் 21) காஞ்சிபுரத்தில் வெளியிட்டார்.
அதில்,கிராம நிர்வாக அலுவலகம் முதல் முதல்வர் அலுவலகம் வரை காகிதமில்லா அலுவலகமாக மாற்றுவோம்.

காகித கோப்புகளை தடை செய்து அதனால் ஏற்படும் தாமதங்களை நீக்கி, இணைய வழியில் நேரடியான துரிதமான அரசு அமைய ஏற்பாடு செய்வோம்.

மக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து ஆவணங்கள், அனுமதிகள், ஆணைகளை செல்போனில் கிடைத்திடும் வகையில் மாற்றுவோம் என்றார்.தமிழகத்திலுள்ள அனைத்து வீடுகளுக்கும் இணைய வசதி செய்து கொடுக்கப்படும்.

நவீன தற்சார்பு கிராமங்களை உருவாக்குவோம். அதாவது கிராமங்களிலுள்ள மனித வள ஆற்றலை சரியாக பயன்படுத்தும் வகையில் தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்களை கிராமங்களிலும் கிளை அமைக்கச் சொல்வோம் என்ற கமல்ஹாசன், பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனையும் ஆற்றல் என அனைத்து வகையிலும் முன்னேறிட எங்கள் அரசு செயல்திட்டம் வகுக்கும்.

இல்லத்தரசிகளுக்கு அவர்களின் உழைப்பு அங்கீகரிக்கப்படும் வகையில் செய்யும் வேலைக்கு சரியான ஊதியம் வழங்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

மேலும், விவசாயத்தை வருமானமும், லாபமும் உள்ள வணிகமாக மாற்றுவதற்கு அனைத்து முன்னெடுப்புகளும் செய்துத் தரப்படும். வறுமைக்கோடு என்ற பழைய அளவீடு மாற்றப்பட்டு செழுமைக் கோடு என்ற புதிய அளவீடு அமையப்பெறும்.

வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் மக்களை, செழுமைக் கோட்டுக்கு கொண்டு வரும் முதல் அரசாக நாங்கள் இருப்போம். ஒவ்வொரு குடிமகனின் அறிவு, திறமை சரிவர வெளிக்கொண்டுவரப்பட்டு அதற்கு ஏற்ற வகையில் திட்டங்கள் அமைக்கப்படும் என்று தனது திட்டங்களை கமல்ஹாசன் அறிவித்தார்.

Leave a Reply