Home > செய்திகள் > கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?

கொரோனாத் தொற்று தடுப்பூசி போட்ட நால்வருக்கு பிரச்சினை?

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட நான்கு தன்னார்வலர்களுக்கு முக பக்கவாதம் என்ற பிரச்சினை உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பைசர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நான்கு பேருக்கு, முக பக்கவாதம் என்று அழைக்கப்படும் Bell’s palsy என்ற பிரச்சினை உருவாகியுள்ளது.

இந்த பிரச்சினை ஏற்பட்டவர்களுக்கு, முகம் ஒருபக்கமாக தொங்கிவிடும், சிலருக்கு சத்தம் பிரச்சினையை ஏற்படுத்தலாம், சிலருக்கு சுவை அறியும் சக்தி போய்விடலாம், சிலருக்கு தலைவலி அல்லது பாதிக்கப்பட்ட பக்கத்தில் முகத்தில் வலி ஏற்படலாம்.

எதனால் இந்த முக பக்கவாதம் ஏற்படுகிறது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்கிடையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நான்கு பேருக்கு இந்த முக பக்கவாதம் ஏற்பட்டுள்ளதையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால், இந்த பக்கவாதத்திற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பிரச்சினை தடுப்பூசி போடுபவர்களுக்கு ஏற்படுவதை கவனித்துக்கொள்ளூமாறு அது மருத்துவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு, எத்தனை பேருக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை தொடர்ந்து பைசர் நிறுவனம் கணக்கில் வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.

இதில் ஒரே ஒரு ஆறுதலான செய்தி என்னவென்றால், இந்த பக்கவாதம் தானாகவே சரியாகிவிடும் என்பதுதான்.

தடுப்பூசி போட்டு பாதிக்கப்பட்ட நான்கு பேருமே முக பக்கவாதத்திலிருந்து வெவ்வேறு கால இடைவெளியில் , அதிக பட்சமாக 10 முதல் 24 நாட்களில் குணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You may also like
பிரிட்டனில் 18 லட்சத்தை தாண்டியது- கொரோனா
இலங்கையில் கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் சடலத்தை ஏற்க மறுக்கும் பெற்றோர்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா
9 மாதங்களுக்கு பிறகு ஓடத்தொடங்கியது ஊட்டி மலை ரயில்

Leave a Reply