Home > செய்திகள் > அதிமுக வேட்பாளர் மாணிக்கம் ஊருக்குள் நுழைய வேளாளர் கூட்டமைப்பினர் எதிர்ப்பு!

அதிமுக வேட்பாளர் மாணிக்கம் ஊருக்குள் நுழைய வேளாளர் கூட்டமைப்பினர் எதிர்ப்பு!

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் அலங்காநல்லூர் பகுதி சுற்றுவட்டார கிராமங்களில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்து வந்து கொண்டிருந்தார்

அப்போது பெரிய ஊர்சேரி கிராமத்தில் வேளாளர் கூட்டமைப்பு மாநில மகளிரணி தலைவி ஷகிலா அன்னலட்சுமி கணேசன், மற்றும் நிர்வாகி சதீஷ் ஆகியோர் இணைந்து வ.உ.சி. சிலைக்கு முன்பாக கருப்பு கொடி கட்டி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் பெரிய ஊர் சேரி கிராமத்திற்கு வாக்கு கேட்க வரக்கூடாது என்றுகூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் தகவல் அறிந்ததும் அலங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் நடேசன், உதவி ஆய்வாளர் இளங்கோவன், திருமலைராஜா, ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து அதிமுக அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பிக் கொண்டே இருந்தனர். தங்கள் சமுதாய பெயரை வேறொரு சமுதாயத்துக்கு மாற்றி அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாங்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று கூறி கோஷமிட்டனர். இதையடுத்து, வேளாளர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவி ஷகிலா அன்னலட்சுமி கணேசன், மற்றும் நிர்வாகி சதீஷ் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Leave a Reply