Home > செய்திகள் > புரெவி புயல்- 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

புரெவி புயல்- 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம்

புரெவி புயலால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருவதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களுக்கு இன்று தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “புரெவி புயல்” 3-ஆம் தேதி, மன்னார் வளைகுடா பகுதியில், பாம்பனுக்கு அருகில் நிலைகொண்டுள்ளது. இந்தப்புயல், 4-ஆம் தேதி அதிகாலையில் பாம்பன் – கன்னியாகுமரிக்கு இடையே, தென்தமிழக கடற்கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறு புயல் கரையை கடக்கும்போது, பெரும் மழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புகள் உள்ளன என்பதால், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு 4-ஆம் தேதி அரசு பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதற்கு ஈடாக 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் செயல்படும். மேற்கூறிய மாவட்டங்களில், அத்தியாவசிய பணிகள் தவிர, பிற பணிகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You may also like
சாலைகளில் மழைநீர்
தமிழகத்தில் கனமழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
புரெவி புயல்- தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு
புரெவி புயலால் தூத்துக்குடி விமான சேவை ரத்து
வானவில் உருவாவது எப்படி?

Leave a Reply