Home > செய்திகள் > இன்று ராஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.

இன்று ராஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.

ஐக்கிய அமீரகத்தில் நடக்கும் ஐபிஎல் திருவிழாவில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எளிதாக வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இன்றைய போட்டியில் ராஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.

டாஸ் விண் பண்ணிய ராஜஸ்தான் கேப்டன் கொல்கத்தாவை முதலில் பேட்டிங் பிடிக்கச் சொல்லியிருக்கிறார்.  இன்றும் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களாக கில் மற்றும் சுனில் நரேன் இறங்குகினார்கள்.

சுனில் வழக்கம்போலவே15 ரன்களோடு அவுட்டானார். கில் 47, ரானா, 22, ரஸல் 24, தினேஷ் கார்த்திக் 1, மோர்கன் 34,, கம்மின்ஸ் 12 ரன்கள் எடுத்தனர்.

130 ரன்களுக்குள் சுருண்டு விடும் என நினைத்த கொல்கத்தா அணியை மோர்கன் அதிரடி ஆட்டத்தால் 174 ரன்கள் என உயர்த்தி வைத்தார்.

ஜாஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர் வீசி 2 விக்கெட் எடுத்து, 18 ரன்களை மட்டுமே கொடுத்து அசத்தினார். ராஜ்பாத், திவெட்டியா, டாம் கரன், உன்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Leave a Reply