Home > அரசியல் > இரமலான் திருநாள் – திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து – முதல்வர் வாழ்த்து

இரமலான் திருநாள் – திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து – முதல்வர் வாழ்த்து

திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து அன்பிற்கு இலக்கணமாக, இரக்கம் – கருணையின் அடையாளமாக, ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். முதல்வர் வாழ்த்து ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த புனிதப் பெருநாளில் உலகில் அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்; மகிழ்ச்சி பெருகட்டும்! என்று முதல்வர் பழனிசாமி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

You may also like
தேசத்தை நேசிக்கும் தலைவனுக்கு வயது நூறு!
தலைமைப் பொறுப்புகளில் தமிழாய்ந்த பெருமக்கள்
அண்ணாவிடம் இருந்தது என்ன பொடி? கலைஞர் சொன்ன ரகசியம்!
கலைஞரிடம் இருந்த விலை மதிப்பற்ற பொருள்!

Leave a Reply