Home > செய்திகள் > பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி – இந்த ஆண்டும் மாணவிகள் சாதனை

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி – இந்த ஆண்டும் மாணவிகள் சாதனை

பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்த ஆண்டின் மொத்த தேர்ச்சி வீதம் 92.3 சதவீதம். இது கடந்த ஆண்டைவிட 1 சதவீதம் அதிகம். தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 7,127 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று காலை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது. கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடந்தது. இந்த தேர்வில் பள்ளி மாணவர்கள், தனித் தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 99 ஆயிரத்து 717 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். அவர்களில் பள்ளிகள் மூலம் 7 லட்சத்து 79 ஆயிரத்து 931 மாணவ மாணவியர் தேர்வு எழுதியுள்ளனர். அதில் மாணவியர் 4 லட்சத்து 24 ஆயிரத்து 285 பேர். மாணவர்கள் 3 லட்சத்து 55 ஆயிரத்து 646 பேர். மற்றவர்கள் தனித் தேர்வர்கள்.

மேற்கண்ட மொத்த மாணவர்களில் பொதுப்பிரிவின் கீழ் 7 லட்சத்து 28 ஆயிரத்து 516 பேரும், தொழில் பாடப்பிரிவின் கீழ் 51 ஆயிரத்து 415 பேரும் தேர்வு எழுதியுள்ளனர். இந்த தேர்வு முடிவுகள் நேற்று காலை வெளியிடப்பட்டது. மொத்த தேர்ச்சி வீதம் 92.3 சதவீதம். அதில் மாணவர்கள் 89.41 சதவீதமும், மாணவியர் 94.80 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளர். மாணவர்களை விட மாணவியர் இந்த ஆண்டு 5.39 சதவீதம் பேர் கூடுதல் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மேலும், இந்த தேர்வில் மாற்றுத் திறனாளிகள் 2,835 பேர் தேர்வு எழுதியதில் 2506 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைவாசிகள் 62 பேர் தேர்வு எழுதிய நிலையில், 50 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் 7 ஆயிரத்து 127 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவியர் தேர்வு எழுதியதில், 2,120 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளை பொறுத்தவரையில் 85.94 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளன. தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் 98.70 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. பிளஸ் 2 தேர்வில் தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் 97.12 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 96.99 சதவீத தேர்ச்சியை பெற்று 2ம் இடத்தையும், கோவை மாவட்டம் 96.39 சதவீத தேர்ச்சியை பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

You may also like
பிரான்சில் 300 சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த வழக்கு: 70 வயது மருத்துவருக்கு சிறை
அண்ணா பல்கலைக்கழக
அண்ணா பல்கலை. தேர்வு கட்டணத்தை திருப்பி தர தேவையில்லை
மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம்
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிப்பு
ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பங்கள் நடைபெற்று வருகிறது.
முதுகலை படிப்புக்கான ஆன்லைன் சேர்க்கை தொடங்கியது.

Leave a Reply