Home > செய்திகள் > பிறந்தநாள் அன்று அக்காவை நினைத்து உருகிய திருமா!

பிறந்தநாள் அன்று அக்காவை நினைத்து உருகிய திருமா!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவின் பிறந்தநாளான இன்று அவர் தனது தொண்டர்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 16 ஆம் தேதி நள்ளிரவு அவர் ஒரு செல்ஃபி வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது…

எனது அரசியல் வாழ்க்கையில் எனக்காகவே வாழ்ந்த தம்பி ராதாகிருஷ்ணன் தனது 20 ஆவது வயதில் விபத்தில் மரணம் அடைந்தார். அந்தச் சமயத்தில் என்னை கொன்றுவிட்டதாக வதந்தி பரவியது. எனது தாயும் தந்தையும்கூட அப்படித்தான் நினைத்தார்கள். நான் வீட்டுக்கு போனதும் எனது தந்தை எனக்கொன்றும் ஆகவில்லையே என்று கதறினார். எனது தம்பியின் மரணத்தை அந்த நிகழ்வு பின்னுக்கு தள்ளிவிட்டது. எனது தம்பியின் மரணம் ஒரு விபத்து என்று தேற்றிகொள்ளலாம். எனது தந்தையின் மரணமும்கூட முதுமையால் வந்தது என்ற அளவில் தேற்றிக்கொள்ளலாம்.

ஆனால், தனக்காக வாழாமல் எனக்கெனவே வாழ்ந்த எனது அக்காவின் மரணம் என்னை அதிரவைத்திருக்கிறது. எனது தம்பி என்னை காப்பாற்றிவிடுவான் என்று நம்பியிருந்த எனது அக்காவின் நம்பிக்கையை நான் நிறைவேற்ற முடியவில்லையே என்று கலங்குகிறேன். கொரோனா பாதிப்பால் 23 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது ஒருமுறைதான் அவரை நான் பார்த்தேன். அப்போது அவர் அலறிய அலறல் எனது மூளையை உறையவைத்தது.

எனக்காகவே வாழ்ந்த எனது அக்காவை நான் பக்கத்திலிருந்து கவனிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமை என்னை கவ்வுகிறது. அவருடைய உயிரற்ற உடலை பார்த்தவுடன் நான் கதறி அழுதேன். கட்சித் தலைவனாக இருந்தால் கம்பீரமாக இருக்கவேண்டும் என்ற வரைமுறைகள் நொறுங்கின. அக்காவைப் பற்றிய நினைவுகள் நெஞ்சுக்குள் புரண்டு வரும்போது அழுகை பீறிட்டது.

இதோ, எனக்கு ஆதரவும் ஊக்கமும் அளித்துவந்த தந்தையையும் தமக்கையையும் இழந்துவிட்டேன். இந்தநாளில் இனி என்னை மக்களுக்காகவே ஒப்படைக்கிறேன். எனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். அக்கா மறைந்த துயரத்துக்காக அல்ல, கொரோனா என்ற தொற்று நோய் அபாயம் காரணமாக சொல்கிறேன். எனது பிறந்தநாளை கொரோனா விழிப்புணர்வு நாளாகவும், பாதிக்கப்பட்டோருக்கு உதவுங்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

You may also like
ஒடிசா உள்ளிட்ட 6 மாநிலங்களில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு
பாலசுப்ரமணிக்காக உருகிய இளையராஜா
சுதந்திர தினத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி அறிவிப்பு வெளியிட முதல்வருக்கு பாரதிராஜா வேண்டுகோள்
மத்திய அரசு மீது ராகுல் காந்தி விமர்சனம்

Leave a Reply