Home > செய்திகள் > பாரத ஸ்டேட் வங்கி லாபம் 52 சதவீதம் அதிகரிப்பு…

பாரத ஸ்டேட் வங்கி லாபம் 52 சதவீதம் அதிகரிப்பு…

பாரத ஸ்டேட் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,574 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) தனது கடந்த செப்டம்பர் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி 2020 செப்டம்பர் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.4,574 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 51.9 சதவீதம் அதிகமாகும். 2019 செப்டம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கி லாபமாக ரூ.3,012 கோடி ஈட்டியிருந்தது.

2020 செப்டம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.28,181.5 கோடியாக உயர்ந்துள்ளது.

இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 14.6 சதவீதம் அதிகமாகும். மேலும் கடந்த காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் நிகர வட்டி லாபவரம்பு 3.34 சதவீதமாக இருந்தது.

கடந்த செப்டம்பர் காலாண்டில் பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாராக்கடன் 5.88 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 2.08 சதவீதமாகவும் உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் நேற்று பாரத ஸ்டேட் வங்கி பங்கின் விலை 1.12 சதவீதம் உயர்ந்து ரூ.207.05ஆக அதிகரித்தது.

You may also like
ரூ.12ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க சம்மதம் ! – விஜய் மல்லையா

Leave a Reply